Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அணை திறந்து ஒரு மாதம் ஆச்சு! இன்னும் தண்ணீர் வரல! - கொதித்தெழுந்த விவசாயிகள்

அணை திறந்து ஒரு மாதம் ஆச்சு! இன்னும் தண்ணீர் வரல! - கொதித்தெழுந்த விவசாயிகள்
நாகை அருகே தேவூரில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்.

சிக்கல், தேவூர், மேலப்பிடாகை, கொத்தங்குடி, கரியாபட்டணம் மற்றும் திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

பகிரவும் WhatsApp Facebook

​​மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு மாதமாகியும் கடைமடைப் பகுதிகளுக்கு இதுவரை பாசன நீர் வந்து சேராததைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.

சிக்கல், தேவூர், மேலப்பிடாகை, கொத்தங்குடி, கரியாபட்டணம் மற்றும் திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
​இதன் ஒரு பகுதியாக தேவூர் கடைத்தெருவில் கீழ்வேளூர் - கச்சனம் பிரதான சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அம்பிகாபதி தலைமையில் திரண்ட விவசாயிகள், கடைமடைப் பகுதிகளுக்கு உடனடியாகப் பாசன நீர் வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

​மேலும், குறுவை சாகுபடிக்குக் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைத் தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் எனவும், பயிர்க்கடன் பெறத் தேவையான சிட்டா, அடங்கல் வழங்க மறுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.


முந்தைய செய்தி
ரூ.5,000 கோடிக்கும் அதிகமான சைபர் மோசடியைத் தடுத்த ‘சஞ்சார் சாதி’ இணையதளம்!
அடுத்த செய்தி
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் வெளி மாநிலத்தவர் பயன்பெற முடியாது: சுகாதாரத்துறை

தொடர்புடைய செய்திகள்